வசூலில் ருத்ர தாண்டவம் ஆடும் ‘ருத்ரன்’…ஒரே நாளில் இத்தனை கோடிகளா..?
ருத்ரன் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
ருத்ரன்
நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் கதிரேசன் இயக்கி தயாரித்துள்ளார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
படத்தின் பின்னணி இசையை இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் 1300 திரையரங்குகளில் வெளியானது.
ருத்ரன் விமர்சனம்
#Rudhran [3/5] : A Mass Masala Entertainer with Emotions and a good message..@offl_Lawrence ‘s show all the way with his comic timings, fantastic dance steps and ferocious action sequences..
He also excels in emotional scenes..@priya_Bshankar a good role and a good perf..
— Ramesh Bala (@rameshlaus) April 15, 2023
படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள். படத்தின் 2-வது பாகம் எடுக்க கூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, விமர்சன ரீதியாக ராகவா லாரன்ஸ்க்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என கூறப்படுகிறது.
ருத்ரன் வசூல்
இந்நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதற்கான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, படம் உலகம் முழுவதும் 8 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாளில் இன்னும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.