அவ்வளவு சுலபத்தில் ஸ்டாலின் முதல்வராகவில்லை – நடிகர் தம்பி ராமையா.!
சுலபத்தில் ஸ்டாலின் முதல்வராகிவிடவில்லை என்று நடிகர் தம்பி ராமையா கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 8-ல் துவங்கி, கோவை வ.உ.சி பூங்காவில் நடைபெற்று நேற்றுடன் நிறைபெற்ற, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற பெயரில் அவரது 70 ஆண்டு கால சரித்திர சாட்சியங்களின் புகைப்பட கண்காட்சியில், சிறப்பு விருந்தினராக மதுரை முத்து இயக்குனர் மற்றும் நடிகரான தம்பி ராமையா கலந்துக்கொண்டனர்.
பின்னர், கண்காட்சியை பார்வையிட்ட பின்பு நடிகர் தம்பி ராமையா செய்தியாளர்கள் சிந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்த கண்காட்சியை பார்க்கும்போது முதல்வர் ஸ்டாலின் ஒரே இரவில் உருவான தலைவர் அல்ல, ஞான நிலை எட்டிய வயதில் முதல்வராக இருக்கிறார்.
அந்த ஞானத்தின் விளைவாக தமிழ்நாடு நிறைய நல்ல விஷயங்களை பார்க்கும். கண்காட்சியின் நிறைவு பகுதி வரும்போது எனக்கே நிகழ்வு ஏற்படுகிறது என்று கூறினார். அவ்வளவு சுலபத்தில் ஸ்டாலின் அந்த இடத்தில் அமரவில்லை என குறிப்பிட்டு பேசிய அவர், ஸ்டாலினின் பெருமை குறித்து விரிவாக பேசியுள்ளார்.