#IPL Breaking: ராணா, ரிங்கு சிங் அதிரடி பேட்டிங்…போராடி தோற்ற KKR அணி.!

Default Image

ஐபிஎல் தொடரின் இன்றைய KKR vs SRH போட்டியில், ஹைதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.

16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணியில், ஹாரி ப்ரூக்கின்(100* ரன்கள்) அதிரடி சதம், கேப்டன் மார்க்ரம்(50 ரன்கள்) மற்றும் அபிஷேக் சர்மா(32 ரன்கள்) ஆகியோரின் அசுர பேட்டிங் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி தரப்பில், ரசல் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

229 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில், முதல் ஒவரிலேயே குர்பாஸ்(0) டக் அவுட் ஆகி வெளியேறினார். அதிரடியாக விளையாடிய ஜெகதீசன் 36 ரன்கள் குவித்த நிலையில், ஆட்டமிழக்க மார்கோ ஜான்சன் ஒரே ஓவரில் வெங்கடேஷ் ஐயர்(10) மற்றும் சுனில் நரைன்(0) அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

ஒருபுறம் கேப்டன் நிதிஷ் ராணா அதிரடியாக விளையாடிக்கொண்டிருக்க, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரசல் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனையடுத்து களமிறங்கிய ரிங்கு சிங் அதிரடியாக விளையாட, கேப்டன் ராணா 75 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்ட நிலையில், ஷர்துல் தாக்குர்(12 ரன்கள்) மற்றும் ரிங்கு சிங்(58* ரன்கள்), இறுதிக்கட்டத்தில் கொல்கத்தா அணிக்கு 205/7 ரன்கள் மட்டுமே அடிக்க, ஹைதராபாத் அணி  அபார வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் தரப்பில், ஜான்சன் மற்றும் மார்கண்டே தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்