கோவையில் மதநல்லிணக்க நிகழ்வு.! இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் இந்து மடாதிபதிகள்.!
கோவையில் மதநல்லிணக்க நிகழ்வாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் உடன், இந்து மடாதிபதிகள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள் கலந்துகொண்டனர்.
மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரமலான் நோன்பு நிகழ்வானது பல்வேறு அமைப்புகலால் நடத்தப்பட்டு, அதில் இந்து தலைவர்கள், கிறிஸ்தவ தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.
மதநல்லிணக்க விழா :
அப்படிதான் ,நேற்று கோவையில், இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த நிகழ்வை இஸ்லாமிய அமைப்பு நடத்தி வருகிறது என்று விழாவில் கலந்து கொண்ட இஸ்லாமிய தலைவர் கூறினார். மேலும் அவர் பேசுகையில், நமது நாட்டில் மதநல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம் போற்றும் வகையில், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் என முக்கிய விழாக்கள் அனைத்து மதத்தினரையும் அழைத்து விழா நடத்தப்படுகிறது.
இந்து மடாதிபதிகள் :
நமது நாடு பல்வேறு மதங்கள் கொண்ட நாடு . இருந்தும் நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். இந்த மதநல்லிணக்கம் போற்றும் விழாவில் போரூர் குருமகா சன்னிதானம் அடிகளார், குமரகுரு அடிகளார் , கிறிஸ்தவ பாதிரியார் என அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.