அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்; மநீம தலைவர் கமல் ஹாசன் வாழ்த்து!
நாளை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, கமல்ஹாசன் வாழ்த்துச்செய்தி தெரிவித்துள்ளார்.
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் நாளை ஏப்ரல் 14 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அவரது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, பாகுபாடு உயர்வுதாழ்வு இருக்கக்கூடாது என்பதை, தம் கொள்கையாகக்கொண்டு அதனை அடைவதற்கான வேலைகளை ஆழமாகவும் அகலமாகவும் செய்துவைத்து விட்டு சென்றிருக்கும் அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளில், அன்னாரின் பாதையில் நடக்க உறுதியேற்போம் என கூறியுள்ளார்.