ராகுல்காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு பதிவு..!
சூரத், பாட்னா நீதிமன்றத்தை தொடர்ந்து தற்போது புனே நீதிமன்றத்திலும் ராகுல் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது புனே நீதிமன்றத்தில் சாவர்க்கரின் பேரன் வழக்கு தொடர்ந்துள்ளார். சூரத், பாட்னா நீதிமன்றத்தை தொடர்ந்து தற்போது புனே நீதிமன்றத்திலும் ராகுல் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக, குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, அவருக்கு மேல்முறையீடு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இந்த தண்டனையை எதிர்த்து அவர் சூரத்தில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதே போன்று ராகுல் காந்திக்கு எதிராக பாட்னா நீதிமன்றத்திலும் அவதூறு வழக்கு தொடரப்பட்டு உளளது.