ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை.! கொலையாளிகள் குறித்து வெளியான தகவல்…

Default Image

பதிண்டாவில் 4 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், ராணுவ முகாகாமிற்குள் மர்ம நபர்கள் நுழைந்ததாக தகவல்.

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாகாமிற்குள் தூங்கிக் கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் நேற்று அதிகாலை 4 மணி அளவில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து ஒரு நாள் ஆகியும் இதுவரை யாரெனெ அடையாளம் காணப்படவில்லை.

கொலையாளிகள்  யார்:

இது குறித்து பதிண்டா ராணுவ மேஜர் அசுதோஷ் சுக்லாவின் கூறுகையில், செவ்வாய் கிழமை இரவு, அனைத்து வீர்ரககளும் பணி முடிந்து தங்கள் அறைகளுக்கு திரும்பினர். அதிகாலை 4:30 மணியளவில், ஒரு வீரர் என்னிடம் வந்து கூறியதாவது, யூனிட் மெஸ் பேராக்கிற்குள் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், 2 மர்ம நபர்கள் வெள்ளை பைஜாமா அணிந்து கையில் துப்பாக்கி மற்றும் கோடாரியுடன் வெளியே வந்ததை பார்த்ததாகவும், பின்னர் அவரை பின் தொடர்கையில், மெஸ்ஸுக்கு எதிரே உள்ள காட்டை நோக்கி தப்பி சென்றதாகவும் கூறினார். இதனை வைத்து அவர்கள் தான் கொலையாளியா? என்று போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தாக்குதல் இல்லை:

இதற்கிடையில், நேற்று தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குநர் எஸ்.பி.எஸ். பர்மர், “இது பயங்கரவாதத் தாக்குதல் அல்ல மற்றும் வெளியில் இருந்து வந்த தாக்குதல் அல்ல என உறுதி செய்தார்.

துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் திருட்டு:

முன்னதாக, கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி ராணுவ முகாகாமில் இருந்து துப்பாக்கி மற்றும் 28 தோட்டாக்கள் கொண்ட மெகசின் ஒன்று திருடப்பட்டது. அது யார் என்றும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அந்த துப்பாக்கி மற்றும் 28 தோட்டாக்கள் காணாமல் போன ஒரு வாரம் கழித்து இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஒருவர் உயிழப்பு:

இந்த நிலையில், நேற்றிரவு தனது துப்பாக்கியை சரிபார்த்து கொண்டிருக்கும் பொழுது, தவறுதலாக குண்டு பாய்ந்து லகு ராஜ் சங்கர் என்பவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று, அதிகாலை இதே முகாமில், 4 வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வின் அதிர்ச்சி விலகாத நிலையில், மேலும் ஒரு வீரர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தது பதற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தற்கொலையா? என்ற கோணத்தில்  விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்