#Breaking: ஆளுநர் ஒப்புதல் தரவில்லையா! தீர்மானம் கொண்டு வாங்க; மற்ற மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்.!
மசோதாக்களை ஆளுநர் உடனடியாக நிறைவேற்ற, பாஜக இல்லாத மற்ற மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் தடை சட்டம் குறித்த தீர்மானத்திற்கு, 2-வது முறைக்கு பிறகு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், பாஜக ஆளாத மாநில முதல்வர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த கடிதத்தில் ஆளுநர் உரிய நேரத்தில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால், அந்தந்த சட்டப்பேரவைகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கு, மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் தடை சட்டம் குறித்த தீர்மானம், ஒருமுறைக்கு இருமுறை நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் முதன்முறையாக ஆளுநர் இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்காத நிலையில், சட்டப்பேரவையில் இரண்டாவது முறை நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையிலும், உரிய நேரத்தில் மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் வழங்கவேண்டும் என குடியரசுத்தலைவர் மற்றும் மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.