அவர் செய்ததில் என்ன தவறு..? ஆர்சிபி வீரருக்கு அஷ்வின் ஆறுதல்.!
இன்று சென்னையில உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அவர்களுக்கு விளையாட்டில் ஊக்கம் அளிப்பதற்காக கால்பந்து, கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி கூட்டத்தினை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் வருகை தந்திருந்தார்.
இதில் கலந்துகொண்டு பேசிய பேசிய அஷ்வின் நேற்று முன்தினம் பெங்களூர் மற்றும் லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கடைசி பந்தில் பெங்களூர் வீரர் ஹர்ஷலின் மன்கட் முயற்சியை பற்றி பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அஷ்வின் ” கடைசி பந்துக்கு ஒரு ரன் தேவை என இருக்கும்போது கண்டிப்பாக எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் (Non-Striker) முன்கூட்டியே ஓட முயற்சிப்பார்.
நானாக இருந்தால் ஒவ்வொரு முறையும் பந்து வீசுவதை நிறுத்தி ரன் அவுட்டாக்க முயற்சித்திருப்பேன். இதில் என்ன தவறு இருக்கிறது. அதில் ஒரு தவறும் இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த போட்டியில் ஹர்ஷல் கடைசி பந்து வீசும்போது அதையே செய்ய வேண்டும் என நினைத்தேன். அதைப்போல அவரும் செய்தார். அவரை போல மற்ற பவுலர்களும் இதனை செய்ய முன்வர வேண்டும்” என கூறியுள்ளார்.