சென்னையில் காற்றாடி பறக்கவிட்ட 6 பேர்…அதிரடியாக கைது செய்த காவல்துறை.!
சென்னை மதுரவாயல் பகுதியில் காற்றாடி பறக்கவிட்ட 6 பேரை காவல்துறை கைது செய்தது.
கோடைகாலம் தொடங்கிவிட்டால் என்றாலே சிறுவர்கள் காற்றாடியை பறக்கவிட்டு விளையாடுவார்கள். ஆனால், அந்த காற்றாடி சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் காரணத்தால் சில மாவட்டங்களில் காற்றாடி பறக்கவிடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், இன்று சென்னையில் காற்றாடி பறக்கவிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த துறை மாணிக்கம், பாலாஜி, கணேசன், வேல், ஹரிகிருஷ்னன், முரளி உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து காற்றாடிகள், நூல்கண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் நேற்றும். முன்தினம் மதுரவாயலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கியத்தில் அவர் படுகாயமடைந்த நிலையில், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.