#BREAKING: பரபரப்பு…ஓடும் பேருந்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட பெண்.!
நாகலட்சுமி என்ற பெண் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த கணேசன் என்பவருடைய மனைவி நாகலட்சுமி. இவருக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இவருக்கு 5 பெண்குழந்தைகள் இருப்பதால் மாவட்ட ஆட்சியர் கருணை அடிப்படையில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக அவருக்கு பணி வழங்கி உதவி செய்து இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நாகலட்சுமி பணிக்கு சென்றுகொண்டு இருந்தபோது மையிட்டான் பட்டியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் 3 பேர் சேர்ந்து நாகலட்சுமியை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறாக பேசி தீட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்துபோன நாகலட்சுமி ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
தற்போது நகலட்சுமியின் உடல் மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஓடும் பேருந்தில் இருந்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.