இனிமேல் அனைத்து சான்றிதழ்களும் ஆன்லைனில்…சட்டப்பேரவையில் அசத்தல் அறிவிப்பு.!

Default Image

அனைத்து வருவாய்த்துறை சான்றிதழ்களும் ஆன்லைன் மூலம் வழங்க நடவடிக்கை

தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று 2023-24ஆம் நிதியாண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டார்.

அதில் தமிழ்நாட்டில் புதியதாக நிலநடுக்க கண்காணிப்பு நிலையம் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் எனவும் , அனைத்து சான்றிதழ்கள், உரிமங்கள், ஆவணங்களை இணையவழியாகப் பெறும் வகையில் வருவாய் நிர்வாகம் முழுவதுமாக கணினிமயமாக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மேலும் வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பொதுமக்களுக்கு 25 வகையான சான்றிதழ்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டுவருகிறது. எனவே இனி வரும்  காலங்களில் இதர சான்றிதழ்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் என வருவாய்த்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்