ஆன்லைன் ரம்மி.! சட்டசிக்கலை அரசு எதிர்கொள்ள வேண்டும்.! சமக தலைவர் சரத்குமார் வலியுறுத்தல்.!
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து எதிர்வரும் சட்டசிக்கலை அரசு எதிர்கொள்ள வேண்டும் என சமக தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி பலர் தங்கள் உயிரை மாய்த்து கொண்ட சம்பவங்கள் அதிகமாக நிகழவே, தமிழக அரசு இதனை குறிப்பிட்டு தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்ட மசோதாவை நிறைவேற்றி அதற்கு அரசாணையும் வெளியிட்டுள்ளது.
சரத்குமார் வரவேற்பு :
இதற்கு பலரும் தங்கள் வவரவேற்பை தெரிவித்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் நடித்த நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் இந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பிற மாநில பெயர்கள் :
அவர் குறிப்பிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை என்றாலும், பிற மாநிலங்களின் பெயர்களை பயனாளர்கள் பதிவு செய்து ஆன்லைன் சூதாட்டம் விளையாடும் நிலை இருப்பதை அரசு சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும்,
நீதிமன்ற சட்டச்சிக்கல் :
இந்தியா முழுவதும் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்தவற்கு மாநில அரசும், மத்திய அரசும் முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசுக்கு இருக்கும் சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, தடைச் சட்டம் தமிழக்தில் பிறப்பிக்கபட்டாலும் நீதிமன்றங்கள் ஏற்கெனவே ஆன்லைன் ரம்மியை அறிவுப்பூர்வமான விளையாட்டு என பதிவு செய்துள்ளது. அதனை அரசு கவனத்தில் கொண்டு அதற்குரிய சட்டச்சிக்கலை எதிர்கொள்ள வேண்டும் எனவும் சமக தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.