மஹிந்திராவின் முன்னாள் தலைவர் கேசுப் மஹிந்திரா காலமானார்..!

Default Image

முன்பையில் மஹிந்திராவின் முன்னாள் தலைவர் கேசுப் மஹிந்திரா காலமானார்.

பிரபல தொழிலதிபரும், மஹிந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவருமான கேசுப் மஹிந்திரா (99) வயது மூப்பு காரணமாக மும்பையில் இன்று காலை காலமானார். 1923 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி  சிம்லாவில் பிறந்த கேசுப் மஹிந்திரா, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் வார்டனில் தனது பட்டப்படிப்பை முடித்தார்.

அதன் பின்னர், 1947 ஆம் ஆண்டு தனது தந்தை நிறுவிய கார் உற்பத்தி நிறுவனத்தில் இணைந்த கேசுப் மஹிந்திரா, 1963 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை நிறுவனத்தின் தலைவராக பணியாற்றினார். அவர் ஓய்வு பெற்றவுடன் அவரது அடுத்த வாரிசாக மருமகன் ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் (INSPACe) தலைவர் பவன் கோயங்கா ட்வீட் மூலம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், “தொழில்துறை உலகம் இன்று மிக உயர்ந்த ஆளுமைகளில் ஒருவரை இழந்துவிட்டது. ஸ்ரீ கேசுப் மஹிந்திராவுக்கு எந்தப் போட்டியும் இல்லை, அவர் வணிகம், பொருளாதாரம் மற்றும் சமூக விஷயங்களை எவ்வாறு இணைத்தார் என்பதன் மூலம் நான் ஈர்க்கப்பட்டேன்” என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

heavy rain ALERT
sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin
mk stalin