இன்றைய (13.4.2023) பெட்ரோல், டீசல் விலை..!
328-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை.
கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்திருப்பதால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 50.00 அல்லது 0.75% அதிகரித்து ரூ.6,732 ஆக உள்ளது. ஆனால், 10 மாதங்களை கடந்த போதிலும் எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
328-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி வருகிறது.