செந்தில்பாலாஜி குறித்த கருத்துகளை நீக்க நிர்மல் குமாருக்கு உத்தரவு – உயர்நீதிமன்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவிக்க பாஜக முன்னாள் நிர்வாகி நிர்மல்குமாருக்கு தடை
தமிழக பாஜக முன்னாள் நிர்வாகி நிர்மல் குமார், டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர் செந்திபாலாஜி குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.
இதனையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி, அவதூறு குற்றச்சாட்டுகளை பதிவிடுவதாக நிர்மல் குமாருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவிக்க பாஜக முன்னாள் நிர்வாகி நிர்மல்குமாருக்கு தடை விதித்துள்ளது. மேலும், செந்தில்பாலாஜி குறித்த கருத்துகளை நீக்கவும் நிர்மல் குமாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.