ஷங்கர் படத்திற்கு இசையமைக்க தமன் வாங்கிய சம்பளம் எத்தனை கோடிகள் தெரியுமா..?

Default Image

தென்னிந்தியாவில் பரபரப்பான இசையமைப்பாளர்களில் ஒருவரான தமன், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்கு தீவிரமாக இசையமைத்து வருகிறார். கடைசியாக இவர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரிய அளவில் பேசப்பட்டது என்றே கூறலாம்.

thaman s

இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தமன் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதில் ஒன்று ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “கேம் சேஞ்ச்சர்”  படத்திற்கு அவர் தான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்திற்கான இசை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் படத்தில் இசையமைக்க தமன் வாங்கியுள்ள சம்பளம் குறித்த விவரம் தற்போது கசிந்துள்ளது. அதன்படி, இந்த படத்திற்காக இசையமைப்பாளர் தமன் ரூ. 1.5 கோடி வரை தமன் சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தமன் தற்போது ‘நயன்தாரா 75’ படத்தில் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணாவுடன் தனது 75வது படத்தை அறிவித்துள்ளார்,. மேலும் படத்திற்கு தற்காலிகமாக ‘நயன்தாரா 75’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்