வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு விவகாரம்.. சட்டப்பேரவையில் அமளி.! பாமக வெளிநடப்பு.!
வன்னியர்கள் இடஒதுக்கீடு விவகாரம் குறித்து ஏற்பட்ட அமளி காரணமாக பாமகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இன்று சட்டப்பேரவை நிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாடு குறித்த கேள்விகளை கேட்டனர். அதற்கு அந்தந்த துறை அமைச்சர்கள் தமிழக அரசு சார்பில் தங்கள் விளக்கங்களை அளித்து வந்தனர்.
பாமக அமளி :
இதில், பாமக சார்பில் வன்னியர்களுக்குக்கான இடஒதுக்கீடு குறித்து பேச அனுமதி கேட்கப்ட்டதாகவும் , அதற்கு சபாநாயகர் பேச அனுமதி தரவில்லை என்றும், பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுப்பட்டு பின்னர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இட ஒதுக்கீடு :
வெளிநடப்பு செய்த பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் எம்எல்ஏ ஜி.கே.மணி பேசுகையில்,வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் அல்ல 15 சதவீதம் கூட இடஒதுக்கீடு தரவேண்டும் என கோரிக்கை வைத்தார்.