பண்டிகையை முன்னிட்டு 500 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு.!
தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13ம் தேதி 500 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கவும், அதுபோல், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 21, 22ம் தேதிகளில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் தகவல் வெளியாகியுள்ளது.
விடுமுறைக் காலங்களில் பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதுவதைச் தவிற்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.