நீட் தேர்வு தற்கொலை:பிரதீபாவின் உடலை வாங்க பெற்றோர்கள் மறுப்பு !
நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் வெற்றி அடைய முடியாத விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டார்.
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட பிரதீபாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கையெழுத்திட பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர் .3 கோரிக்கைகள் நிறைவேறும் வரை இன்னிலை தொடரும் என பிரதீபாவின் பெற்றோர் கூறிவருகின்றனர்.
நீட் தேர்வு ரத்து செய்யும் வரை உடற்கூறாய்வு செய்யக் கூடாது. நீட் தேர்வால் உயிர் பலிகள் தொடருகின்றன.நீட் ரத்து உயிர்கள் பறிபோவதை தடுக்க அவசியம் ஆகும். நீட் தேர்வு முடிவுகள் முன்னதாக வெளியிட்டுவிட்டனர். இதனால் எங்களது மகளை பாதுகாக்க முடியாமல் பறிகொடுத்துவிட்டோம்.
நீட் தேர்வை ரத்து செய்யும் வரை பிரதீபாவின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர், உறவினர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.