ஷாக்… தங்கம் விலை கிடுகிடு உயர்வு…. இன்றைய நிலவரம் இதோ.!
எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று கூட அதிரடியாக உயர்ந்து இருந்தது. அதனை தொடர்ந்து இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.45,440-க்கு விற்பனை. அதைப்போல, கிராமிற்கு ரூ.50 உயர்ந்து 5,680 ரூபாய் ஆகவும், விற்பனையாகிறது.
மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 100 காசுகள் அதிகரித்து ரூ.81.40-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,400 எனவும் விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகை வாங்கும் நகைப்பிரியர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.