ரமலான் நோன்பு காலத்தில் செய்யக் கூடாததை செய்த வக்கார் யூனுஷ்! ரசிகர்களிடம் பகிரங்க மனிப்பு கேட்ட வக்கார் யூனுஷ்!
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனுஷ் ரமலான் நோன்பு காலத்தில் பிறந்தநாள் கேக் வெட்டியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த வாசிம் அக்ரமின் பிறந்தநாள் ஜூன்3ஆம் தேதி கொண்டாடப்பட்ட போது வக்கார் யூனுசும், வாசிம் அக்ரமும் கேக் வெட்டினர்.
ஆனால் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், கிரிக்கெட் வீரர்கள் கேக் வெட்டியதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதை அடுத்து தமது செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ள வக்கார் யூனுஷ், ரமலானையும், நோன்பு இருப்பவர்களையும் தாங்கள் மதித்து நடந்திருக்க வேண்டும் என்றும், முட்டாள் தனமாக செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.