ருத்ரன் திரைப்படத்தை வெளியிட தடை.! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘ருத்ரன்’ திரைப்படத்தை ஏப்ரல் 24 வரை வெளியிட தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் கதிரேசன் இயக்கி தயாரித்துள்ளார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் சரத்குமார், பிரியா பவானி சங்கர் சிவாஜித், நாசர், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ், ஷியாம் பிரசாத் மேலும் சில பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படத்தை ஏப்.24 வரை வெளியிட உயர்நீதிமன்றம் தற்போது தடை விதித்துள்ளது. ஏப்.14-ஆம் தேதி தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாக இருந்தது. இதனையடுத்து, படத்தின் டப்பிங் உரிமை பெற்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இந்தி டப்பிங் உரிமைக்காக தயாரிப்பு நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை மீறி, கூடுதல் பணம் கேட்டு ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்ததாக கூறியது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏப்.24 வரை படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகும் என படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.