மாமல்லபுரத்தில் உலக சர்ஃபிங் லீக் போட்டிகள்; அமைச்சர் உதயநிதி.!
மாமல்லபுரத்தில் உலக சர்ஃபிங் லீக் போட்டிகள் நடத்தப்படும் என அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார்.
விவாதம்: தமிழக சட்டபேரவையில் இன்று விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், விளையாட்டு துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து கூறினார்.
உதயநிதி உரை: அந்த உரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, மாமல்லபுரத்தில் உலக அளவிலான சர்ஃபிங் லீக் போட்டிகள் நடத்தப்படும், இந்த போட்டிகளை நடத்துவதற்கு ரூ.2.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
மேம்பாட்டு வசதிகள்: சென்னையில் உள்ள ஐந்து முக்கிய விளையாட்டு அரங்கங்களில், விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டிற்காக 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும். மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில், 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய திறந்தவெளி மற்றும் உள் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.