ஐ.பி.எல். போட்டிகளை பார்ப்பதற்கு எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் – எஸ்.பி.வேலுமணி
ஐபிஎல் போட்டிகளை காண எம்.எல்.ஏ.-க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில், மார்ச் 31-ஆம் தேதி 16-வது ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து இந்த ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில், அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி அவர்கள், ஐபிஎல் போட்டிகளை காண எம்.எல்.ஏ.-க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும், கடந்த அதிமுக ஆட்சியில், எம்.எல்.ஏ.-க்களுக்கு ஐபிஎல் பாஸ் வழங்கப்பட்டது.