உலகக்கோப்பைக்கு தயாராக 5 மைதானங்கள் தரம் உயர்வு…’500 கோடி’ ஒதுக்கிய பிசிசி.!
5 நகரங்களில் உள்ள கிரிக்கெட் மைதானங்களை பிசிசிஐ தரம் உயர்த்த முடிவு செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் போது, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் சுத்தமான கழிப்பறைகள் இல்லாததால் ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில், 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், 500 கோடி செலவில் மைதானங்களை தரம் உயர்த்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
அதன்படி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, மொஹாலி, டெல்லி ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் தரம் உயர்த்தபடவுள்ளது. அதன்படி, டெல்லி மைதானத்தை சீரமைக்க 100 கோடியும், ஹைதராபாத்துக்கு 117 கோடியும், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனுக்கு 127.47 கோடியும், மொஹாலியில் உள்ள பழைய பிசிஏ மைதானத்துக்கு 79.46 கோடியும், வான்கடேவுக்கு 78.82 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு 500 கோடி செலவில் மைதானங்களை தரம் உயர்த்துவவதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.