BREAKING NEWS: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டது!
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டது .அமைச்சர் அன்பழகன், முதன்மை செயலர் சுனில்பாலிவால், துணைவேந்தர் சூரப்பா முன்னிலையில் வெளியிடப்பட்டது.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் வெளியாகியுள்ளது. பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த 1,59,631 மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது.
முன்னதாக பொறியியல் படிப்புகளில் சேர கடந்த ஆண்டைக் காட்டிலும் 11 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். மொத்தத்தில் ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பி.இ, பி.டெக் படிப்புகளுக்கு இந்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வு முறையை அண்ணா பல்கலைகழகம் அறிமுகப்படுத்தியது. மாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் 42 உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையசேவை முடக்கப்பட்டதால், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் சனிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டது.
பொறியியல் படிப்பில் சேர்வதற்காக ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 940 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், நடப்பாண்டில் கூடுதலாக 11 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜுன் 8ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பும், ஜூலை மாதத்தில் கலந்தாய்வும் தொடங்கும். இதற்கான நேரம், நாள் ஆகியவவை எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.