ஆற்றில் நடந்து சென்ற பெண் தெய்வம்…ஆசிர்வாதம் வாங்க திரண்ட பொதுமக்கள்…வைரலாகும் வீடியோ.!
மத்திய பிரதேசத்தில் இருக்கும் நர்மதா நதியில் ஒரு வயதான பெண்மணி நதியின் நடுவில் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனையடுத்து, அவரை பார்த்த பலர் ‘நர்மதாவின் மறுபிறவி என்று நம்பி அவரை பார்க்க கூடினார்கள்,
நதியில் நடந்தது சென்றது மட்டுமின்றி அந்த பெண் தன்னை சந்திப்பவர்களுக்கு நாட்டு மருந்து வழங்கினார். எனவே அவரை பலரும் அதிசய சக்தியாக பார்க்க தொடங்கினார்கள். பிறகு அவரிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காக மக்கள் நர்மதா ஆற்றில் திரண்டனர்.
A video of an elderly woman walking in the serene waters of the Narmada River in Jabalpur district of Madhya Pradesh went viral.#India #Madhyapradesh #Trending #Viralvideos pic.twitter.com/JTwiuJ0lkw
— Backchod Indian (@IndianBackchod) April 10, 2023
இதனையடுத்து மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு சென்ற போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காணாமல் மூதாட்டி என்றும் அவருடைய பெயர் ரகுவன்ஷி எனவும் தெரியவந்தது. நர்மதா-வை சேர்ந்த ரகுவன்ஷி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
Fact is that the woman has been identified as Jyoti Raghuvanshi.She is a resident of Pipariya in Narmadapuram. There is no miracle of walking on water, Where she was walking in the river,water level was low(2/3)pic.twitter.com/3DBqLAjbsM
— D-Intent Data (@dintentdata) April 9, 2023
தற்போது அவர் வேண்டுதலுக்காக நர்மதா ஆற்றிற்கு வந்துள்ளார். ஆற்றில் தண்ணீர் அளவு குறைவாக இருந்த காரணத்தால் அவர் ஆற்றில் நடந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. பிறகு ரகுவன்ஷி, “தான் தெய்வம் இல்லை என்றும், ஏறக்குறைய ஒரு வருடமாக புனித யாத்திரை மேற்கொண்டு வருவதாகவும்” அங்கிருந்த மக்களிடம் தெளிவு படுத்தினார்.