பாஜக ஒன்றும் காங்கிரஸ் போல சர்வாதிகார கட்சி இல்லை.! கர்நாடக முதல்வர் விமர்சனம்.!
காங்கிரஸ் கட்சியை போல பாஜக ஒன்றும் சர்வாதிகார கட்சி அல்ல என கர்நாடக முதல்வர் விமர்சனம் செய்துள்ளார்.
கர்நாடகத்தில் இன்னும் ஒரு மாதத்தில் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கும் வேளை என்பதால், அங்கு பிரச்சார வேலைகளில் பிரதான கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் காங்கிரஸ் கட்சி பற்றி, கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், பாஜக ஒரு ஜனநாயகக் கட்சி. பாஜக ஒன்றும், காங்கிரஸைப் போல சர்வாதிகாரம் படைத்த கட்சி இல்லை என்று குறிப்பிட்டார்.
மேலும், ‘ மக்களை பற்றிய ஒவ்வொரு ஆலோசனையையும் நாங்கள் நன்றாக புரிந்துகொண்டு வருகிறோம். அதனை அறிந்து தான் எங்கள் கர்நாடக தேர்தல் பட்டியல் வெளியிடப்படும்.’ என கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை குறிப்பிட்டார்.