மக்களே மாட்டு கோமியம் குடிக்காதீங்க…இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை.!

Default Image

பசுவின் கோமியம் குடிப்பதற்கு ஏற்றதல்ல கோமியத்தில் அபாயகரமான கேடு விளைவிக்கும் 14 வகை பாக்டீரியாக்கள் உள்ளன என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த போஜ் ராஜ் சிங் தலைமையில் மூன்று பிஎச்.டி மாணவர்களுடன் கொண்ட குழு பசு மாடுகளின் கோமியம் மக்கள்  அருந்துவதற்கு உகந்ததா..? இந்த கோமியம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பது குறித்து ஆய்வு  நடத்தியது.

இந்த ஆய்வில்” பசுவின் கோமியம் அருந்துவதால் குறைந்தது 14 வகையான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதால் அதனை குடித்தால் நேரடியாக வயிற்ருக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது.

எனவே  பசுவின் கோமியத்தில் மனிதர்கள் உடல்நலனுக்கு கேடு விளைக்கும் 14 வகையான பாக்டீரியாக்கள்  உள்ளது. இவை மனித உடலுக்குள் சென்றால், வயிற்றில் தொற்று உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும் எனவும், மனிதர்கள் கோமியத்தை நேரடியாக குடிப்பது உடல்நலத்திற்கு உகந்தது அல்ல, எனவே கோமியம் குடிக்கவேண்டாம் என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்