கலாஷேத்ரா பாலியல் விவகாரம் : மனித உரிமைகள் ஆணைய விசாரணை நிறைவு..!
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மனித உரிமைகள் ஆணையம் மேற்கொண்ட விசாரணை நிறைவு
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு சில பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேர் மீது மாணவிகள் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அந்த 3 ஆசிரியர்களையும் கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
விசாரணை நிறைவு
இந்த விவகாரத்தில், ஏற்கனவே மகளிர் ஆணையம் விசாரணை நடத்திய நிலையில், இன்று மனிதஉரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தியது. 6 வார காலத்திற்குள் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், மனித உரிமைகள் ஆணையம் நடத்தியது நடத்தியது. இந்த விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளது.
கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குனர் பத்மாவதி, முதல்வர் பகல ராம்தாஸ் ஆகியோரிடம் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தேர்வுகள் முடிந்தவுடன் அடுத்த வாரம் மாணவிகளிடம் விசாரணை நடத்தப்படும் என மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.