ரூ 1.79 கோடி எம்.பி., எம்.எல்.ஏ., க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க மத்திய அரசு ஒதுக்கீடு!
ஒரு கோடியே 79 லட்ச ரூபாயை எம்.பி., எம்.எல்.ஏ., க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மக்கள் பிரதிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க 12 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து டெல்லி, மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, தெலுங்கானா, கர்நாடகம், ஆந்திரம், கேரளா, தமிழ்நாடு ஆகிய 11 மாநிலங்களில் 12 நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்ட நிலையில், முதற்கட்டமாக ஒரு கோடியே 79 லட்ச ரூபாயை ஒதுக்கி உள்ள மத்திய நிதித்துறை அமைச்சகம், இந்த நிதியை செலவழித்த பின்னர், அடுத்த கட்ட நிதி வழங்கப்படும் என்று கூறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.