மத்திய அரசு கரும்பு விவசாயிகளுக்கான நிலுவையை வழங்க நடவடிக்கை!
மத்திய அரசு ,கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்கும் வகையில் 8 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி செய்யப்படும் என அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரும்பு விவசாயிகள் அதிகமாக உள்ள கைரானா (Kairana) மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில், பாரதிய ஜனதா தோல்வியடைந்தது.
இந்நிலையில், கரும்பு ஆலைகள், விவசாயிகளுக்கு நிலுவை வைத்திருக்கும் தொகையை வழங்கும் வகையில் 8 ஆயிரம் கோடியை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில், இடைக்கால கூடுதல் இருப்பாக சர்க்கரையை கொள்முதல் செய்ய ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொகை கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.