தேநீர் விருந்து ரூ.30 லட்சம், ஊட்டியில் ரூ.3 லட்சம்.! விதிமீறல்களை பட்டியலிட்ட – நிதியமைச்சர் பிடிஆர்
தமிழக அரசு ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கும் நிதி மற்றும் சமீபத்திய சர்ச்சைகள் குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
இதனை தொடர்ந்து பேசிய தியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆளுநர்களுக்கு செயலாக்கம், வீட்டு செலவு, Petty Grants ஆகிய 3 பிரிவுகளில் நிதி ஒதுக்கப்படுகிறது. ஏழை, எளிய மக்களின் மருத்துவ செலவுகள், திருமண உதவி போன்றவற்றிற்காக செலவிட வேண்டிய நிதியை ஆளுநர் தவறாக பயன்படுத்தியுள்ளனர். உடனடியாக, இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார்.
அதாவது, ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.18 கோடியில் ரூ.11 கோடிக்கு முறையான கணக்கு இல்லை என்ற வருந்தத்தக்க தகவலை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்டியலிட்டு சட்டபேரவையில் பகிர்ந்துகொண்டார்.
- ஆளுநருக்கு ஒதுக்கப்பட்ட ரூ.18 கோடியில் ரூ.11.32 கோடி ஆளுநர் மாளிகை கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.
- ஆளுநர் மாளிகை செலவு செய்த ரூ.11.32 கோடிக்கான விவரங்கள் எதுவும் அரசுக்கு வழங்கப்படவில்லை.
- அட்சய பாத்திரம் என்று பெயரை சொல்லி ஆளுநர் மாளிகை கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.
- யுபிஎஸ்சி மாணவர்கள் கூட்டத்திற்கு ரூ.5 லட்சம் ரூபாய் செலவு ஊட்டி ராஜ்பவனில் நடந்த கலாசார நிகழ்வுக்கு ரூ.3 லட்சம் என செலவிடப்பட்டுள்ளது.
- ஆளுநர் மாளிகையில் இருந்து விதிகளை மீறி ஒரே நபருக்கு மீண்டும், மீண்டும் 6 மாததிற்கு ரூ.50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணத்தை கொடுத்துள்ளனர்.
- அனைத்து பணியாளர்களுக்கான போனஸ் என ரூ.18 லட்சத்தை ஒதுக்கி உள்ளனர்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகை செலவினங்களில் விதிமீறல்கள் தடுக்கப்படும் எனவும், விதிமுறைகளின் படிதான் செலவுகள் செய்யப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பெயரில், உடனடியாக கொண்டு வருவேன் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதி கொடுத்துள்ளார்.