ஒரே ஓவரில் 5 சிக்ஸர்…நொந்துபோன பந்துவீச்சாளரை ஊக்கப்படுத்திய கொல்கத்தா அணி.!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மறக்க முடியாத வெற்றியைப் பதிவு செய்தது. ஒரு மாபெரும் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி நன்றாக விளையாடியது.
கடைசியாக கடைசி 8 பந்துகளில் 39 ரன்கள் கொல்கத்தா அணிக்கு தேவைப்பட்டது கிட்டத்தட்ட அனைவரும் கொல்கத்தா அணி தோல்வி அடைந்துவிடும் என்றே நினைத்தனர். ஆனால் ரிங்கு சிங் மொத்தமாக போட்டியவை மாற்றிவிட்டார் என்றே கூறலாம்.
ஆம், கடைசி ஓவரில் 29 தேவை என்ற நிலையில் இருந்த 20வது ஓவரைக் குஜராத் அணி வீரர் யாஷ் தயால் வீசினார். முதல் பந்தை உமேஷ் யாதவ் ஆடினார், அவருக்கு சிங்கிள் கொடுத்தார். பிறகு அதனை தொடர்ந்து 5 பந்துகளில் 5 சிக்ஸ் அடித்து அணியை ரிங்கு சிங் வெற்றிபெறவைத்தார்.
Chin up, lad. Just a hard day at the office, happens to the best of players in cricket. You’re a champion, Yash, and you’re gonna come back strong ????????@gujarat_titans pic.twitter.com/M0aOQEtlsx
— KolkataKnightRiders (@KKRiders) April 9, 2023
இந்நிலையில் பலரும் ரிங்கு சிங்குவை பாராட்டி வரும் நிலையில், குஜராத் பந்து வீச்சாளர் யாஷை ஊக்கப்படுத்தும் வகையில் கொல்கத்தா அணி ட்வீட்டர் பக்கத்தில் “சின் அப், பையன். அலுவலகத்தில் ஒரு கடினமான நாள், கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களுக்கு நடக்கும். நீங்கள் ஒரு சாம்பியன், யாஷ், நீங்கள் வலுவாக திரும்பி வருவீர்கள்” என பதிவிட்டுள்ளனர்.