தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

Default Image

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

மழைக்கு வாய்ப்பு : 

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

  • 10-ஆம்தேதி தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.
  • 11-ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
  • 12 முதல் 14 வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வெயில் : 

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப அலை தாக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்ப அலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும். எனவே, குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் வெயிலின்போது, வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். மோர், இளநீர் போன்ற குளிர்பானங்களை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்