நஞ்சுக்கொடி மூலம் 2 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு.! ஆய்வில் அதிர்ச்சி…

Default Image

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தாயின் நஞ்சுக்கொடிக்குள் அதன் வைரஸ் தாக்கம் ஊடுருவியதன் விளைவாக, மூளை பாதிப்புடன் பிறந்த குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவிக்கின்றன.

பீடியாட்ரிக்ஸ் இதழில் வெளியிடப்பட்ட மியாமி பல்கலைக்கழக ஆய்வின்படி, 2020 ஆம் ஆண்டில் டெல்டா கொரோனா மாறுபாட்டின் உச்சக்கட்ட பரவலின் போது, தடுப்பூசிகள் கிடைப்பதற்கு முன், வேறுவேறு வயிற்றில் பிறந்த இரண்டு குழந்தைகளும் மூன்று மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

மேலும், இரண்டு குழந்தைகளுக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும் ஒரு குழந்தை 13 மாதங்களில் உயிரிழந்த நிலையில், மற்றொன்று தீவிர கண்காணிப்பில் இருந்தும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அந்த இரண்டு குழந்தைகளும் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்யவில்லை, ஆனால் அவர்களின் இரத்தத்தில் அதிக அளவு கொரோனா ஆன்டிபாடிகள் இருந்தன என்று மியாமி பல்கலைக்கழகத்தின் குழந்தை மருத்துவம் மற்றும் உதவி பேராசிரியரான டாக்டர் மெர்லைன் பென்னி கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த வைரஸானது அவர்களது தாயின் நஞ்சுக்கொடி மூலம் குழந்தைக்கும் பரவி இருக்காலம் என்றார். அந்த இரண்டு தாய்மார்களின் நஞ்சுக்கொடிகளிலும் வைரஸ் இருப்பதற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இது போக, இறந்த குழந்தையின் மூளை பிரேதப் பரிசோதனையில் மூளையில் வைரஸின் தடயங்களைக் காட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் இது அரிதாக தான் கருதப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்