தமிழகத்தில் மிக நீளமான மேம்பாலம்! ரூ.3,700 கோடி சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்!
தமிழகத்தில் மிக நீளமான மதுரை – நத்தம் மேம்பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
தமிழகத்தில் ரூ.3,700 கோடி சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி சற்று நேரத்தில் அடிக்கல் நாட்டுகிறார். தாம்பரம் – செங்கோட்டை விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தாம்பரத்தில் புறப்படும் ரயில் திருவாரூர், தஞ்சை, அம்பாசமுத்திரம் வழியாக செங்கோட்டை செல்லும்.
37 கிமீ தூர திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி அகல ரயில் பாதையும் பிரதமர் நாட்டுக்கு அர்பணிக்கிறார். மதுரை – செட்டிக்குளம் உயர்மட்ட பாலம், நத்தம் – துவரங்குறிச்சி 4 வழிச்சாலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. இதுபோன்று திண்டுக்கல் – வடுக்கப்பட்டி – தெற்கு வெங்கநல்லூர் இடையே 4 வழிச்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது.
மேலும், தமிழகத்தில் மிக நீளமான மதுரை – நத்தம் மேம்பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் பிரதமர். மதுரை தல்லாகுளம் – ஊமச்சிகுளம் வரை 7.5 கிமீக்கு ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் அடியில் 150 அடிக்கு ஒன்று என பலமான அஸ்திவாரத்துடன் 268 தூண்கள் கட்டப்பட்டுள்ளன. இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.