ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதியின் நாக்கை அறுப்போம், மிரட்டல் விடுத்த காங்கிரஸ் தலைவர்; சட்ட அமைச்சர் பதிலடி.!
ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதியின் நாக்கை அறுப்போம் என்று திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் கூறியுள்ளார்.
2019 தேர்தல் பரப்புரையில் மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு குற்றம் சாட்டப்பட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் தரப்பில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் காங்கிரஸ் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் மணிகண்டன், ராகுல் காந்திக்கு எதிராக வஞ்சிக்கும், மோடி அரசினை எதிர்த்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதியின் நாக்கை அறுப்போம் என கூறியுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் கூறியதாவது, நீதிபதி எச் வர்மா கேளுங்க, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் நாக்கை அறுப்போம் என்று பேசியுள்ளார். சிறை தண்டனை விதித்த நீதிபதியை மிரட்டியதாக, மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
#WATCH | Tamil Nadu: “When we will come to power, we will chop off the tongue of the judge who delivered the verdict to send our leader Rahul Gandhi to jail,” said Manikandan, Congress Dindigul district president during a protest organised by the party on April 6, 2023 pic.twitter.com/a2cO2jt4fm
— ANI (@ANI) April 8, 2023
இது குறித்து பதிலளித்த சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, நீதித்துறையை காங்கிரஸ் தாக்குவது இது முதன்முறையல்ல, அவசரநிலை பிரகடனத்திற்கு முன்பே காங்கிரஸ் கட்சியினர் நீதித்துறையை தாக்கியுள்ளனர் என்று கூறியுள்ளார். அவர்கள் விரக்தியால் இப்போதும் செய்கிறார்கள் நாங்கள் நீதித்துறையின் மீது, அரசியலமைப்பில் நம்பிக்கை வைத்துள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.
#WATCH | This is not happening for the first time that Congress is threatening the judiciary. Even before the Emergency, the Congress people attacked the Judiciary. They are doing it now also because they are frustrated. We believe in the Constitution: Union Law Min Kiren Rijiju pic.twitter.com/Vu9kwcyJAC
— ANI (@ANI) April 8, 2023