பிளாஸ்டிக் குடோனில் பயங்கர ‘தீ விபத்து’…25 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள்.!
டெல்லி திக்ரி கலான் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லி-ஹரியானா எல்லையில் உள்ள திக்ரி கலான் பகுதியில் உள்ள பிவிசி சந்தையில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் சனிக்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்க குறைந்தது 25 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளன.
#WATCH | Delhi: Massive fire breaks out in a plastic godown at PVC market in Tikri Kalan area. 25 fire tenders at the spot. No casualties reported so far. pic.twitter.com/l2cq2RnYKO
— ANI (@ANI) April 7, 2023
பல மணி நேரமாக பரவிய தீ அணைப்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வரும் நிலையில். இன்னும் தீயை கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. மேலும், முதற்கட்ட தகவல்களின்படி, இதுவரை இந்த தீ விபத்து சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
#WATCH | Delhi: Morning visual from Tikri Kalan area where fire broke out in a plastic godown during the early hours today. 25 fire tenders at the spot. No casualties reported so far. https://t.co/yhTyNp2M4y pic.twitter.com/Clr2ul8CmF
— ANI (@ANI) April 8, 2023
இதைப்போல கடந்த 2021 -ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள திக்ரி கலான் பிவிசி சந்தையில் இதேபோன்ற ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, தீயை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிரமம் ஏற்பட்டதால் தீயணைப்பு துறையினர் 40 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.