உலகக்கோப்பையை வெல்லக்கூடியவர் சூர்யகுமார்…லெஜண்ட் ரிக்கி பாண்டிங் புகழாரம்.!
சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் சீசனில் அட்டகாசமாக விளையாடியதன் காரணமாக இந்திய அணியிலும் இடம்பிடித்து கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வருகிறார். சமீப காலமாக அவர் சரியாக விளையாடவில்லை என்றே கூறலாம். குறிப்பாக நடந்து முடிந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி மோசமான சாதனையை கூட படைத்திருந்தார்.
அதைப்போல நடைபெற்று வரும் ஐபிஎல் சீசன் முதல் போட்டியிலும் சரியாக விளையாடவில்லை. இந்நிலையில், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் ஃபார்ம் அவுட் ஆகும் போது அணியினர் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், உலகக்கோப்பையை வெல்லக்கூடிய வீரர் சூர்யகுமார் யாதவ். அவர் கொஞ்சம் சீரற்றவராக இருக்கலாம், ஆனால் பெரிய தருணங்களில் உங்கள் போட்டிகளை வெல்லும் வகையில் விளையாட கூடிய வீரர் அவர். ஒற்றைக்கையால் போட்டியை வெல்லக்கூடியவர். அவருடன் உறுதுணையாக நின்று, வாய்ப்புகளை இந்திய அணி வழங்க வேண்டும். அவரை ஒருநாள் உலக கோப்பைக்கான அணியில் கண்டிப்பாக எடுக்க வேண்டும்” என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.