பிரதமர் மோடி வருகை; நாளை வழக்கம் போல் ரயில்கள் இயங்கும்; தெற்கு ரயில்வே.!

Default Image

பிரதமர் மோடி நாளை தமிழகம் வரவுள்ள நிலையில் சென்னையில் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி, நாளை தமிழகத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி, செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, சென்னை பகுதிகளில் அவர் வருவதாக பட்டியலிடப்பட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக நாளைபோக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை மறுநாள் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு பிரதமர் மோடி செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு சென்னையின் ரயில் சேவை நாளை ரத்து செய்யப்படவில்லை, வழக்கம் போல் செயல்படும் என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது, புறநகர் மற்றும் விரைவு ரயில்கள் நாளை உரிய அட்டவணைப்படி இயங்கும். மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை டிக்கெட்கள் வழங்கப்படமாட்டாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்