போலீசாரிடம் இருந்து தப்பிக்க தண்டவாளத்தில் காரை ஓட்டிய நபர்..! 10 ஆண்டுகள் சிறை..!

Default Image

போலீசாரிடம் இருந்து தப்பிக்க தண்டவாளத்தில் காரை ஓட்டிய போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிய போதைப்பொருள் வியாபாரியை போலீசார் கைது செய்தனர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 36 வயதான கீரோன் ஃபிரான்சிஸ் என்பவர், நகரத்தில் போதைப்பொருள் விற்பனையை நடத்தி வந்தார்.

ஃபிரான்சிஸ் திருடப்பட்ட லேண்ட் ரோவர் காரை ஓட்டிச் சென்றதை பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால், அவர் காரை நிறுத்தாமல் சாலையில் வேகமாக சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து போலீசார் சேஸிங் செய்தனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஃபிரான்சிஸ் செஷண்ட் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகளைக் கடந்து தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

இதனால் தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரயில் பாதியிலேயே நிறுத்தபட்டது. இதையடுத்து அவரை மடக்கி பிடித்த போலீசார் ஃபிரான்சிஸை கைது செய்தனர். இதையடுத்து, அவரை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். விசாரணையில் பிரான்சிஸின் நடவடிக்கைகளால் 66 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது என்று நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து பிரான்சிஸ் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்