அரசின் புதிய ஆன்லைன் கேமிங் விதிகள்; மாற்றத்திற்கான தருணம்- எம்.பி.எல் நிறுவன சிஇஓ.!
ஆன்லைன் கேமிங் தளங்களுக்கு, அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடு விதிகள் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான தருணம்..
வளர்ச்சிக்கு முக்கியமான தருணம்: ஆன்லைன் கேமிங் மற்றும் பெட்டிங் சூதாட்ட தளங்களுக்கு அரசாங்கம் விதித்துள்ள புதிய விதிகள் குறித்து, இது தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கியமான தருணம் என பிரபல ஆன்லைன் கேமிங் செயலியான மொபைல் பிரீமியர் லீக் (MPL)நிறுவனத்தின் சிஇஓ சாய் ஸ்ரீனிவாஸ், தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, அரசாங்கத்தின் இந்த் புதிய ஆன்லைன் கேமிங் விதிகள், ஆன்லைன் கேமிங் இடைத்தரகர்கள் மற்றும் சூதாட்டத்தை வேறுபடுத்துவதால், இது தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கியமான தருணம் என்று கூறினார்.
வரவேற்பு: கேம்ஸ்24×7 இணை நிறுவனர் திரிவிக்ரமன் தம்பி கூறுகையில், நுகர்வோர் நலனில் சிறிதும் அக்கறை காட்டாத, இத்தகைய சட்டவிரோத சூதாட்ட தளங்களை கட்டுப்படுத்த இந்த விதிகள் உதவும் என்று கூறினார். இந்திய கேமிங் ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் மற்றும் தொழில் சங்கங்கள் அரசின் இந்த புதிய விதிகளால் உற்சாகமடைந்துள்ளனர்.
தெளிவான விதிகள்: விதிகள் மிகவும் ஆன்லைன் விளையாட்டிற்கு தேவையான ஒழுங்குமுறை தெளிவை வழங்குகின்றன என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். முன்னதாக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஆன்லைன் பெட்டிங் மற்றும் சூதாட்ட தளங்களுக்கான புதிய விதிகளை வெளியிட்டது.
இந்தியாவின் மிகப்பெரிய ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ் தளமான ட்ரீம்11-ன் துணை நிறுவனமான ட்ரீம் ஸ்போர்ட்ஸின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹர்ஷ் ஜெயின், கூறும்போது அரசின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது என்று கூறினார்.