IPL2023 LSGvsSRH: டாஸ் வென்றது ஹைதராபாத் அணி, முதலில் பேட்டிங்.!
ஐபிஎல் தொடரின் இன்றைய LSG-SRH அணிகளுக்கிடையேயான போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு.
16-வது ஐபிஎல் தொடரின் 10-வது லீக் போட்டி இன்று லக்னோவில் உள்ள ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதுகிறது. லக்னோ அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியும் ஒரு தோல்வியும் பதிவு செய்துள்ளது.
ஒரு போட்டியில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை. இன்றைய போட்டியில் முதல் வெற்றியை பெறும் நோக்கில் ஹைதராபாத் அணி களமிறங்குகிறது. முதல் போட்டியில் விளையாடாத கேப்டன் மார்க்ரம் இன்று தலைமை தாங்குகிறார்.
மேலும் லக்னோ அணியில் இன்று குயின்டன் டிகாக் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
SRH அணி: மயங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங்(w), ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம்(c), ஹாரி புரூக், வாஷிங்டன் சுந்தர், அப்துல் சமத், புவனேஷ்வர் குமார், நடராஜன், உம்ரான் மாலிக், அடில் ரஷித்
LSG அணி: கேஎல் ராகுல்(c), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன்(w), ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, அமித் மிஸ்ரா, யாஷ் தாக்கூர், ஜெய்தேவ் உனத்கட், ரவி பிஷ்னோய்