ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை..! ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய மந்தீப் சிங்..!
ஐபிஎல் வரலாற்றில் அதிக டக் அவுட்கள் எடுத்து மோசமான சாதனை படைத்துள்ளார் மந்தீப் சிங்.
16-வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற தொடரின் 9-வது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில்டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, கொல்கத்தா அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அதில் குர்பாஸ் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு, பெங்களுரூ அணியின் டேவிட் வில்லி வீசிய பந்தில் வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மந்தீப் சிங், அதே ஓவரில் வில்லி வீசிய பந்தில் ரன்கள் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இந்த டக் அவுட் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக டக் அவுட்கள் எடுத்த வீரர் என்ற மோசமான சாதனை படைத்துள்ளார். இதனுடன் சேர்த்து ஐபிஎல்லில் 15 முறை ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.
Two in Two by David Willey!
A double wicket maiden by @david_willey ????????
Venkatesh Iyer and Mandeep Singh depart.
Live – https://t.co/V0OS7tFZTB #TATAIPL #KKRvRCB #IPL2023 pic.twitter.com/FjuJoHWzLH
— IndianPremierLeague (@IPL) April 6, 2023
இதற்கு முன்னதாக ஐபிஎல்லில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 14 முறை டக் அவுட் ஆகியுள்ளனர். தற்போது, மந்தீப் சிங் இவர்கள் இருவரையும் முந்தியுள்ளார். மேலும், பெங்களூரு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.