சமூக வலைதள பதிவுகளை சரிபார்க்க PIBக்கு அதிகாரம் – புதிய விதிமுறை அறிவிப்பு

Default Image

சமூக வலைதள பதிவுகளை சரிபார்க்க PIBக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய விதிமுறைகள் அறிவிப்பு.

கூகுள், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உள்ள பதிவுகளை சரிபார்க்க, PIB எனும் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்திற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது மத்திய தகவல் தொழிநுட்ப துறை அமைச்சகம். அதன்படி, அரசாங்கத்தைப் பற்றிய எந்தவொரு தவறான தகவலை PIB சுட்டிக்காட்டினால், அந்த தகவலை அந்நிறுவனங்கள் உடனடியாக நீக்க வேண்டும் என மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறையில் உள்ளது.

இந்த நடவடிக்கை ஊடகங்கள், அரசுக்கு ஆதரவாக இல்லாத செய்திகளைப் புகாரளிப்பதில் தடையாக இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். ஆனால், தணிக்கைக்கு பயப்பட வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. உண்மைச் சரிபார்ப்பு என்பது தவறான தகவல்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகும், மேலும் இது பேச்சு சுதந்திரத்தை பாதிக்காது. பாதுகாப்பான விதியானது, ஆன்லைனில் வெளியிடப்படும் உள்ளடக்கத்தின் மீதான சட்ட நடவடிக்கைகளில் இருந்து இடைத்தரகர்களைப் பாதுகாக்கிறது என கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்