தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்.! பாஜக தலைவர் பண்டி சஞ்சய் விடுதலை..!

Default Image

10ஆம் வகுப்பு இந்தி தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் கைதான தெலுங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் ஜாமீனில் விடுதலை.

தெலுங்கானாவில் தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொதுத்தேர்வில், இந்தி பாடத்திற்கான வினாத்தாளானது வெளியாகிவிட்டது.

வாட்ஸப்பில் பொதுத்தேர்வு வினாத்தாள் :

பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரிக்கையில், கமலப்பூரில் பாஜக நிர்வாகி புரம் பிரசாத் என்பவர் பொதுத்தேர்வு வினாத்தாளை வாட்சாப் மூலம் தெலுங்கானா பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய்க்கு அனுப்பியது தெரியவந்துள்ளது.

பாஜக தலைவர் கைது :

இதனை அடுத்து, தெலுங்கானா பாஜக மாநில தலைவரும், எம்பியுமான பண்டி சஞ்சய்யை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவத்திற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, புவனகிரி மாவட்டத்தில் உள்ள பொம்மலா ராமரம் காவல் நிலையம் முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாஜக தலைவர் விடுதலை :

இதையடுத்து, எஸ்எஸ்சி தாள் கசிவு வழக்கில் பண்டி சஞ்சய் மற்றும் அவருடன் சேர்த்து மூன்று பேர் ஏப்ரல் 19 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். பின்னர், நீதிமன்றத்தில் சஞ்சய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனுவை ஏற்ற நீதிமன்றம், பாண்டி சஞ்சய்க்கு இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது எனக்கு கூறி நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்