கோடை வெயில்.. 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு!
புதுச்சேரியில் தேர்வு முடிந்த பின்னர் மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் என அமைச்சர் தகவல்.
புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 11ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெறும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். தேர்வு முடிந்த பின்னர் மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் என்றும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டமிட்டு உள்ளது எனவும் கூறியுள்ளார்.