அதிகரிக்கும் கொரோனா பரவல்..! தயார் நிலையில் இருக்க அறிவுரை..!
கொரோனா பரவல் அதிகரிப்பதால் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
நாட்டில் பரவல் அதிகரித்து வருவதையடுத்து மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதார அமைச்சர்கள் மற்றும் முதன்மை தலைமைச் செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அனைத்து மாநிலங்களிலும் சுகாதார வசதிகள் உள்கட்டமைப்புகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், வருகிற ஏப்ரல் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் சுகாதாரத் தயார்நிலையை மதிப்பாய்வு செய்யவும், ஏப்ரல் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் அனைத்து மருத்துவமனை உள்கட்டமைப்புகளின் போலி பயிற்சிகளை நடத்தவும் மாநில சுகாதார அமைச்சர்களை அவர் வலியுறுத்தினார்.
அதுமட்டுமல்லாமல், பொதுமக்களிடையே தேவையில்லாத அச்சத்தை பரப்பாமல், எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும்’ எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் 6,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.